அதிபர் முகேஷ் அம்பானியின் மகளுக்கு நேற்று இத்தாலியில் நிச்சயதார்த்தம்

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகளுக்கு நேற்று இத்தாலியில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

பிரபல தொழிலதிபாரான ரிலையன்ஸ் ஜியோ அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவர் பிரமால் குழும அதிபர் அஜய் பிரமாலின் மகனான ஆனந்த் பிரமாலை திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின.

மும்பையில் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய நிகழ்வான கோர் தானா நடைபெற்றது. அம்பானியின் ஆடம்பர குடியிருப்பில் நடந்த இந்த விழாவுக்கு பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது இவர்களுடைய நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி   இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் இத்தாலி நாட்டில் லேக் கோமாவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த விழா வரும் ஞாயிறு வரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

Sharing is caring!