அதிர விடும் முகேஷ் அம்பானியின் மகள் திருமண ஏற்பாடுகள்

மும்பை:
அதிர வைக்கிறது முகேஷ் அம்பானியின் மகள் திருமண ஏற்பாடுகள் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் தொழிபதிபரின் மகன் ஆனந்த் பிரானல் என்பவரை மணக்கிறார். வரும் 12ம் தேதி உதய்பூரில் நடக்கவுள்ள இவர்களின் திருமணத்துக்கு 22 தனி விமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலையத்திலிருந்து திருமணம் நடக்கவுள்ள பகுதிக்கு செல்ல உலகின் உள்ள பிரபலமான சொகுசு கார்களான பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி போன்ற கார்கள் 1000 க்கு மேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்துக்கே இவ்வளவு என்றால் திருமணத்துக்கு எவ்வளவு செய்வார் என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!