அது உண்மை இல்லீங்கோ… இல்ல… மத்திய அமைச்சர் கிளப்பிய சர்ச்சை

புதுடில்லி:
அது உண்மை இல்லீங்கோ… இல்ல… என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

காங்., தலைவர் ராகுல் தற்போது 12 முதல் 15 பயணமாக கைலாஷ் மானசரோவர் சென்றுள்ளார். கைலாஷ் மானசரோவர் வீடியோ ஒன்றை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் அவர் இல்லை.

இந்நிலையில் அங்கு யாத்திரீகர்கள் சிலருடன் ராகுல் இருப்பது போன்ற சில புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படங்கள் போலியானவை எனவும், போட்டோஷாப் செய்யப்பட்டவை எனவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு ராகுலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, விளக்கமும் அளித்துள்ளார். அதில் ராகுல் மற்றொரு நபருடன் சிரித்துக் கொண்டு நிற்பது போன்றும், தனது கையில் கைத்தடி ஒன்றை வைத்துள்ளது போன்றும் உள்ளது. ஆனால் அந்த படத்தின் இடதுபுறம் கீழ் பகுதியில், நின்று கொண்டிருக்கும் இருவரின் நிழல்கள் மட்டும் தான் கீழே விழுவது போன்று உள்ளது. கைத்தடியின் நிழல் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராகுல்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!