அது செயல் திட்டமல்ல… பீகார் முதல்வர் சொல்றார்

புதுடில்லி:
தேஜ கூட்டணியின் செயல் திட்டமல்ல என்று ராமர் கோவில் கட்டுவது பற்றி பீகார் முதல்வர் தெரிவித்துள்ளார்.

”உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, தே.ஜ., கூட்டணியின் செயல் திட்டமல்ல,” என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக பீகாரைச் சேர்ந்த, தே.ஜ., கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் நிதிஷ் குமார் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது, தே.ஜ., கூட்டணியின் செயல் திட்டம் அல்ல. வளர்ச்சிப் பணிகள் குறித்தே, எங்கள் பிரசாரம் இருக்கும். பீகாரின் வளர்ச்சி மட்டுமே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!