அந்தர் பல்டி அடித்த அழகிரி… ஆதரவாளர்கள் நழுவல்…? கட்சியில் சேர்த்துக் கொண்டால் தலைமையை ஏற்பேன்

சென்னை:
கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஏற்றுக் கொள்வேன்… ஏற்றுக் கொள்வேன் என்று அழகிரி அதிரடி பல்டி அடித்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுகவில் தன்னை இணைத்து கொள்ள வேண்டும் என அழகிரி வலியுறுத்தினார். ஆனால், ஸ்டாலின் தரப்பு இதற்கு ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து வரும் 5ம் தேதி சென்னையில் சென்னை சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பேரணி குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திமுகவில் என்னை மீண்டும் இணைத்து கொண்டால், ஸ்டாலினை தலைவராக ஏற்று கொள்ள தயாராக உள்ளேன். செப்.,5ம் தேதி நடக்கும் அமைதி பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள். பேரணி நடத்துவதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்கு நெருக்கடி ஏதுமில்லை. இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!