அந்நிய செலாவணி கையிருப்பு முடிவடைந்துள்ளது

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 130 கோடி உயர்ந்து, 40,179 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 40,048 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு 125 கோடி டாலர் அதிகரித்து 37,741 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுவே, கையிருப்பு அதிகரிக்க முக்கிய காரணம்.

தங்கம் கையிருப்பு 3.59 கோடி டாலர் அதிகரித்து 2,041 கோடி டாலராகவும், எஸ்டிஆர் மதிப்பு 26 லட்சம் டாலர் உயர்ந்து 148 கோடி டாலராகவும் உள்ளது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 43 லட்சம் டாலர் அதிகரித்து 248 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Sharing is caring!