அனந்த்நாக் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு:
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் முன்வார்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. போலீசார், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்டம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலை முதல் தொடர்ந்து பல மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!