அனல் மின் நிலையத்தில் யூனிட்கள் அடிக்கடி பழுது

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுதடைகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது யூனிட் வருடாந்திர பராமரிப்பு பணி நேற்று முதல் துவங்கியது.

இதன் காரணமாக 15 நாட்கள் இந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்தேவை குறைவு காரணமாக 3வது யூனிட்டிலும் நேற்று முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.2 யூனிட்டுகள் இயங்காததால் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற 3 யூனிட்டுகளில் வழக்கம்போல் தொடர்ந்து மின் உற்பத்தி நடந்து வருகிறது.

Sharing is caring!