அனுமதிக்கலாமா? கூடாதா? சட்ட கமிஷன் ஆலோசிக்கிறது

புதுடில்லி:
அனுமதிக்கலாமா? கூடாதா? சட்ட கமிஷனிடம் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. எதற்காக தெரியுங்களா?

ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்ய பொது மக்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து சட்ட கமிஷனிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து சட்ட கமிஷன் ஆலோசித்து வருகிறது.

இதை தவறாக பயன்படுத்தி, சிலரின் நற்பெயரை கெடுக்க வாய்ப்புள்ளதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளிப்பதற்கு சிலர் சிரமப்படுகின்றனர் என்பது உண்மை. அவர்களுக்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் புகார்அளிப்பது எளிதாக இருக்கும்.

ஆனால், போலீசார் முன் நேரடியாக புகார் அளிக்கவரும் போது, அவர்களால் பொய் சொல்வது கடினம். அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்தை குறித்து போலீசார் புரிந்து கொள்வார்கள். சிலரின் நற்பெயரை கெடுக்க ஆன்லைன் வழக்குப்பதிவு செய்யும் முறையை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இருப்பினும் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!