அனைத்து கணினிகளையும் கண்காணிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

புதுடில்லி:
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடைசெய்வது.

தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10 விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.
அதன்படி, உளவுத்துறை, போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency), டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,“இந்த 10 விசாரணை முகமைகளுக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் அனைத்து விதமான தகவல் தொடர்பான வசதிகளையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்கத் தவறினால், அவர்களுக்கு 7 ஆண்டுவரை கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!