அனைத்து பெருமையும் பிரதமருக்குதான் சேரும்… அமித்ஷா புகழாரம்

புதுடில்லி:
விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பெருமை பிரதமர் மோடியையே சேரும் என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டது குறித்து பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் வழங்கிய தீர்ப்பு ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான எல்லா பெருமையும் பிரதமர் மோடியையே சேரும்.

இந்திய வங்கிகளை ஏமாற்றிய ஒரு தொழில் அதிபரை விசாரணை ஏஜென்சிகள் சளைக்காமல் தேடுதல் வேட்டை நடத்தி அதி்ல் வெற்றியும் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!