அப்பாவுக்கு 10 ஆண்டு, மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

இஸ்லாமாபாத்:
சிறை… சிறை… மாஜி பிரதமருக்கும், அவரது மகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊழல் பணத்தில் லண்டனில் 4 குடியிருப்புகளை வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. தற்போது, நவாசும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!