அமெரிக்கவாவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் சீனா தலையிட முயற்சி

அமெரிக்கவாவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறுகின்ற ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார்.

சீன வர்த்தகத்தில் சவால் விடுத்த முதலாவது ஜனாதிபதி நான் என்பதால், அவர்களுக்கு நானோ அல்லது நாமோ வெற்றி பெறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு சான்றுகளையும் ட்ரம்ப் வழங்கவில்லை.

இந்தநிலையில், இந்தத் தேவையற்ற குற்றச்சாட்டை சீன வௌிவிவகார அமைச்சர் மறுத்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட தேர்தலிலிருந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வரி தொடர்பில் முரண்பாடுகள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!