அமெரிக்கா&வடகொரியா இடையிலான நீண்டகால பகை அதிபர்களின் சந்திப்பு பின் குறைந்தது

1950-53ம் ஆண்டுகளில் நடந்த கொரிய போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷ்யா மற்றும் சீனாவுக்கு நெருக்கமாகவும் இருந்தன.

அமெரிக்கா&வடகொரியா இடையிலான நீண்டகால பகை கடந்த ஜூன் மாதத்தில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு பின்னர் குறைந்தது.

சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தை ஏற்பட்ட முடிவின் படி, கொரிய போரில் இறந்த அமெரிக்க வீரர்கள் 55 பேரது உடைமைகளை தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடமைகள் உரிய மரியாதைக்கு பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Sharing is caring!