அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் துப்பாக்கிச்சூடு… 11 பேர் பலி
பிட்ஸ்பர்க்:
அமெரிக்காவில் 42 வயதுடைய ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில் 42 வயதுடையவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுற்றிவளைத்து, தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
அப்போது நடைபெற்ற விசாரணையில், அவர், 46 வயதான ராபர்ட் போவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து
அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்த துப்பாக்கிச்சூட்டை, வெகுஜன கொடூரமான செயல் என்றார்.
அமெரிக்கா, இந்த மாதத்தின் துவக்கத்தில் தான், 25 ஆண்டுகளுக்கு பிறகு, துப்பாக்கிச்சூடு இல்லாத வார இறுதி நாட்களை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி– பத்மா மகன், திருச்சி