அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் இயற்கை எய்தியுள்ளார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் (George H.W. Bush) தமது 94 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் நேற்று (30) மாலை உயிரிழந்துள்ளதாக, அவர்களது குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 41 ஆவது ஜனாதிபதியாகி 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரை பதவி வகித்துள்ள ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பின்னர் இரு தடவைகள் நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியுள்ளார்.

இந்தநிலையில், குருதியில் கிருமித்தொற்று ஏற்பட்டமை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதேநேரம், ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் மனைவி பார்பரா அவரது 73 ஆவது வயதில் உயிரிழந்தார். பார்பரா உயிரிழந்து ஒரு வார காலத்தில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு, ஜனாதிபதி ட்ரம்ப் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது அனுதாபத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!