அமெரிக்காவில் பாரிய நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால், கரையோரப் பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் மக்கள் கட்டடங்களிலிருந்து அவசரமாக ஓடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கரேஜ் மாநகரிலிருந்து வடக்காக 11 கிலோமீற்றர் தூரத்தில் 40.9 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதன்போது, பாலங்கள் மற்றும் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கரேஜ் மாநகரில் கிட்டத்தட்ட 300,000 மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகின்றது.

Sharing is caring!