அமெரிக்காவில் வாகன விபத்தில் இலங்கை பெண் உயிரிழந்தார்

அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்மனி ஒருவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா லம்போக்கில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம், கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக லம்போக் செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.
55 வயதான மாலினி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.
மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று நான்கு பேரை மோதியது. இதன்போது காயமடைந்த நால்வரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
எனினும் இதில் மாலினி என்ற இலங்கைப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sharing is caring!