அமெரிக்காவில் விமானம் கடத்தல்….வெடித்து சிதறியது.

அமெரிக்க விமான நிலையத்தில் இருந்து மெக்கானிக்கால் திருடிச் செல்லப்பட்ட விமானம் சிறிது தொலைவு சென்றதும் கிழே விழுந்து நொறுங்கியது.

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை மெக்கானிக் ஒருவர் அந்த விமானத்தை பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாரக்காத வகையில் அந்த மெக்கானிக் திடீரென விமானத்தை ஆன் செய்து அவர் ஒட்டிச் சென்றார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வது அறியாமல் திகைத்தனர். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின், உடனடியாக அந்த விமானம் பறக்கும் பாதை கண்காணிக்கப்பட்டது. விபரீதம் ஏற்படும் என்று ராணுவ விமானம் ஒன்று அந்த விமானத்தை விரட்டிச் சென்றது.

ஆனால் அதற்கு போதிய பயிற்சி இல்லாத அந்த மெக்கானிக்கால் விமானம் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் விமானம் ஊட்டுவது குறித்த தகவல்களை வைத்து விமானத்தை இயக்கியுள்ளார்.  ஆனால் அவரால் சரியாக விமானத்தை முயக்க முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் அந்த மெக்கானிக் உயிரிழந்தார். அதன் பாகங்கள் தீவு ஒன்றில் விழுந்தன.

விபத்து நடந்த இடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் விமானம் திருடப்பட்டு பின் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிசன்தது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக, இந்தச் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு எதுவும் இல்லை என்றும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் அந்த விமானத்தை மெக்கானிக் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Sharing is caring!