அமெரிக்கா புதிய வரி விதிப்பு….சீனா முறைப்பாடு

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய வரி விதிப்பிற்கு எதிராக சீனா உலக வர்த்தக ஸ்தாபனத்தில் முறையிட்டுள்ளது.

அமெரிக்காவினால் 16 பில்லியன் டொலர் பெறுமதியான சீன உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிப்பு நேற்று (23) மேற்கொள்ளப்பட்டது.

இதனை எதிர்த்து வர்த்தக அமைச்சின் விசாரணை சட்டப்பிரிவு 301-இன் கீழ் சீனாவால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பின் மூலமாக அமெரிக்கா உலக வர்த்தக ஸ்தாபனத்தின் சட்டங்களை தெட்டத்தௌிவாக மீறிவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை சீனா வலுவாக எதிர்ப்பதுடன், எதிர் நடவடிக்கைகளை மீண்டும் எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்புத் தீர்மானமானது அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சீன ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, துருக்கியின் அலுமினியம் மற்றும் உருக்கு உற்பத்திகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட மேலதிக தீர்வைகளுக்கு எதிராக உலக வர்த்தக ஸ்தாபனத்தில் துருக்கியும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!