அமெரிக்க அதிபரின் இங்கிலாந்து பயணம் : கடும் பாதுகாப்பு

அமெரிக்க அதிபரின் ஒரு வார இங்கிலாந்து பயணத்தை ஒட்டி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வாரப் பயணமாக இங்கிலாந்து செல்ல உள்ளார். அவர் வருகையின் போது அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் என சில அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதை ஒட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமை ஆக்கப்பட்டுள்ளன.

தலைநகர் லண்டனில் அவருக்கு எதிராக இதுவரை இரு இடங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த போராட்டங்கள் குறித்து லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் அங்குள்ள அமெரிக்க மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஅந்த அறிவிப்பில், “அமெரிக்க அதிபரின் இங்கிலாந்து பயணத்தின் போது போராட்டங்கள் நடத்த உள்ளதாக சில அமைப்புக்கள் அறிவித்துளன. அதை ஒட்டி அமெரிக்க அதிபருக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அமெரிக்க மக்கள் அதிபரை காண மிகவும் ஆர்வமாக உள்ளது அறிந்ததே. இருப்பினும் பாதுகாப்புக் கருதி அதிக கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்

மேலும் அதிபர் கலந்துக் கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் உங்கள் பாதுகாப்பையும் சுற்றுச் சூழலையும் கவனமாக கண்காணிக்க வேண்டும். கூட்டத்தில் நடுவே சமூக விரோதிகள் புகுந்து குழப்பத்தை விளைவிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அமெரிக்கர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் இங்கிலாந்து காவல்துறையினர் பல காவலர்களையும் அதிகாரிகளையும் ஈடுபடுத்தி உள்ளது. அதனால் நாட்டில் பல இடங்களில் போதுமான காவல் அதிகாரிகள் இல்லை. மக்கள் பலரும் தாங்கள் இதனால் துயருறுவதாக தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!