அமெரிக்க அதிபர் மனைவி சென்ற விமானத்தில் புகை… பரபரப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் மனைவி சென்ற விமானத்தில் திடீரென்று புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மனைவி மெலினியா டிரம்ப், அதிபர் மாளிகை பயன்படுத்தும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் மூலம் பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு சென்றார்.
அப்போது விமான கேபினில் இருந்து திடீரென புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானதளம் வந்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் ஏந்த சேதமும் இல்லை என்றார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S