அமெரிக்க அதிபர் மீது பார்லி.,யில் கண்டன தீர்மானம்?

வாஷிங்டன்:
பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன்னர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், மற்றும் பிளேபாய் பத்திரிக்கை மாடல் கேரன் மெக்துஹால் ஆகிய இரு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், விஷயம் வெளியே தெரியாமலிருக்க பெருந்தொகை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை ட்ரம்பின் முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹென் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லிமென்டில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் அதிபர் டிரம்ப் கவலை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!