அமெரிக்க நகரங்களை விட சிறப்பாக இருக்கும்…முதல்வர் பேச்சு

போபால்:
அமெரிக்க நகரங்களை விட சிறப்பாக இருக்கும்… சிறப்பாக இருக்கும்… என்று முதல்வர் சொல்லியிருக்காருங்க.

அடுத்த 5 ஆண்டுகளில் ம.பி.,நகரங்கள் அமெரிக்க நகரங்களை விட சிறப்பாக இருக்கும் என மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறி உள்ளார். ம.பி.,மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதை ஒட் நகர்புற பகுதிகளில் வளர்ச்சி கொண்டாட்டம் என்ற விழா நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் பங்கேற்று பேசுகையில், அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள நகரங்கள் மிகவும் தூய்மையாகவும், அழகான மேம்பட்ட நகரங்களாக அமெரிக்காவை விட சிறப்பானதாக இருக்கும் என்றார்.

முதல்வரின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வரின் இப்பேச்சு சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று என காங்கிரஸ் கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல் நாத் கூறுகையில் பருவமழை மற்றும் மழை காலத்திற்கு பின்னர் இது குறித்து மக்களிடம் சிவராஜ்சவுகான் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!