அமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள அன்னபோலிஸ் பகுதியில் ‘தி கேப்பிடல் கெஜட்’ எனும் செய்தி நிறுவன அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர், கண்மூடித்தனமாக நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கூறுகையில், ‘தாக்குதலின் நோக்கம் குறித்து சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளோம்.

தொடர்ந்து மற்ற செய்தி நிறுவனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரங்கல் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பத்திரிகை அலுவலகம், அமெரிக்காவின் பாரம்பரியமிக்கது. கடந்த 1884ம் ஆண்டு துவங்கிய இந்த பத்திரிகை, மாலை ேநர பத்திரிகையாக துவங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!