அமெரிக்க மாஜி அதிபர்கள் வீடுகளில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
நியூயார்க்:
வெடிகுண்டு… வெடிகுண்டு இருப்பது கண்டறிப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பிலகிளிண்டன், ஒபாமா வீடுகளில் வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இருவரும், நியூயார்க் வடக்கு பகுதியில் உள்ள சாபாக்என்ற நகரில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
தகவலறிந்த எப்.பி.ஐ. போலீசார் மற்றும் நியூ கேஸில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வெடிகுண்டு செயலழிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். தற்போது வீட்டில் கிளிண்டனும், ஹிலாரியும்
இல்லை என கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் அதிபர் ஒபாமா வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒபாமா வீ்ட்டிற்கு வந்த வெடி குண்டு பார்சலை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி