அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொறன்ரோ விஜயம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், பாரியார் ஹிலரி கிளின்டனுடன் கனடாவின் ரொறன்ரோ மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பரம் மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இந்த கனேடிய விஜயம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தம்பதியரின் வட அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக இந்த கனேடிய விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை, குறித்த தம்பதியர் இவ்வருடத்தில் வட அமெரிக்காவின் நான்கு நகரங்களுக்கும், 2019ஆம் ஆண்டு ஒன்பது நகரங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

அவர்களது இவ்விஜயம் லாஸ் வெகாஸ் பார்க் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்வுடன் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்வருட இறுதிக்குள் ரொறன்ரோ, மொன்றியல் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களுக்கு பயணிக்கவுள்ளனர்.

அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டுக்கான சுற்றுப்பயணம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்போது, நியூயோர்க், மிச்சிகள், பென்சில்வேனியா, கனெடிகட், கொலம்பிய மாவட்டம், பிரிட்டிஷ் கொலம்பியா, வொஷிங்டன் மற்றும் கலிபோர்னியா ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

Sharing is caring!