அமைச்சரின் அநாகரீக செயல்… விளையாட்டு வீரர்களுக்கு பரிசுப் பொருட்களை தூக்கி வீசினார்

கார்வார்:
விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை மாநில அமைச்சர் தூக்கி எறிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்விளையாட்டரங்க திறப்பு விழாவில், விளையாட்டு வீரர்களை நோக்கி, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை, மாநில வருவாய் துறை அமைச்சர் துாக்கி எறிந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கார்வார் மாவட்டம், ஹலியால் தொகுதியில், பொதுப் பணி துறையால் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. திறப்பு விழாவுக்கு பின், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் ஹலியால் தொகுதி, எம்.எல்.ஏ.,வும், மாநில வருவாய் துறை அமைச்சருமான, காங்., கட்சியைச் சேர்ந்த, ஆர்.வி.தேஷ்பாண்டே, விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். பின் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக, பரிசு பெற அழைக்கப்பட்டனர். அனைத்து வீரர்களையும் மேடைக்கு அருகில் வரும்படி அழைத்த அமைச்சர் தேஷ்பாண்டே அவர்களை நோக்கி விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை துாக்கி எறிந்தார்.

இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன், குடகு மாவட்டத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை நோக்கி நிவாரண பொருட்களை, தேஷ்பாண்டே துாக்கி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!