அரசியல் தலைவர்களை தாக்க திட்டம்… பிடிபட்ட 16 பேரிடம் விசாரணை

புதுடில்லி:
அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் என்ஐஏ அமைப்பினர் நடத்திய சோதனையில் கைதானவர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள், பாதுகாப்பு சார்ந்த இடங்களை தாக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஐஎஸ் அமைப்பை போன்று ஹர்கட் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற புதிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து டில்லி, உ.பி.,யில் பல இடங்களில் தேசிய புலனாய்வு போலீசார் எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

டில்லியில் 6, உ.பி.,யில் 5 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக என்ஐஏ ஐஜி அலோக் மிட்டல் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை போன்று உருவாக்கப்பட்ட ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பு குறித்து தகவல் அடிப்படையில் உ.பி., மற்றும் டில்லியில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த அமைப்பினர் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

டில்லியின் சீலமபூர், உ.பி.,யின் அம்ரோஹா, ஹபுர், மீரட், லக்னோ ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. அவர்களிடமிருந்து வெடிமருந்துகள், ஆயுதங்கள், நாட்டு ரக துப்பாக்கிகள், ரூ.7.5 லட்சம் பணம், 100 மொபைல் போன்கள், 135 சிம் கார்டுகள், லேப்டாப்கள், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் இன்னும் சோதனை நடக்கிறது.

சந்தேகத்தின் பேரில் பிடித்த 16 பேரிடம் நடத்த விசாரணைக்கு பின்னர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள், பாதுகாப்பு சார்ந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ரிமோட் கன்ட்ரோல் மூலம் அவரகள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டிருந்தனர். இது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரை பார்த்து அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இவர்கள் வெளிநாட்டு ஏஜென்ட்களையும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த கும்பலின் தலைவனாக முக்தி சோஹைல் செயல்பட்டு வந்துள்ளார். உ.பி.,யின் அம்ரோஹா சேர்ந்த இவர், டில்லியில் தங்கி மசூதியில் வேலைபார்த்து வந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!