அரசுக்கு தான் ஆதரவு… அதிமுகவுக்கு இல்ல… கஸ்தூரி விளக்கம்

சென்னை:
அரசுக்கு தான் ஆதரவு… அதிமுகவுக்கு இல்லை என்று நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

அந்த சந்திப்பின் போது முதல்வர் தன்னை 22 வருடங்களுக்கு முன்பு சந்தித்ததை நினைவு வைத்திருந்ததாக கஸ்தூரி டுவிட் போட்டு இருந்தார். கஸ்தூரி அதிமுகவில் இணைத்துவிட்டார் என்கிற செய்தியும் பரவியது. அது உண்மையில்லை என கஸ்தூரி கூறியுள்ளார்.

“நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டும் அதிமுகவிற்கு இல்லை” என அவர் விளக்கியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!