அருண்ஜெட்லிக்கு காங்கிரஸ் கண்டனம்

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில், ‘‘மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய முறையை பயன்படுத்தினார். இந்திரா காந்தி ஜனநாயகத்தை பேரரச ஜனநாயகமாக மாற்ற நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது. கட்டாய கருத்தடை செய்யப்பட்டது.

1933ம் ஆண்டி-ல் நாஜி ஜெர்மனியிலும் இதேபோல் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலமைப்பை ரத்து செய்தார்கள். இருவரும் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்ற குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள்.

அவசரநிலைப் பிரகடனம் செய்த இந்திரா காந்தி அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கி, செயலிழக்கச் செய்தார். ஹிட்லரும் ஜெர்மனி அரசியல் சட்டம் 48-ம் பிரிவை சுட்டிக்காட்டி மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் சர்வாதிகாரச் செயல்களை நியாயப்படுத்தினார்’’ என்று தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லியின் இந்த கருத்து மிக மோசமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!