அருவி நீரில் மூழ்கி ஆந்திரா பொறியாளர் பலி

அமெரிக்காவில் உள்ள இந்திய பொறியாளர் கோகினேனி நாகார்ஜூனா அங்கு புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அருவி அருகே உள்ள பாறையின் மீது ஏறி தண்ணீரில் குதித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அவர் பலியானார். பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளரால் மீண்டு மேலே வர முடியாமல் போனது.

2 மணி நேரம் தீவிர தேடுதலுக்கு பின்னரே அவரது உடல் மீட்கப்பட்டுது. பொறியாளர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Sharing is caring!