அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு

காஞ்சிபுரம் அருகே அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்கப் பெண்ணை மீட்டு காவல்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட்டு பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் அரை நிர்வாணமாக சுற்றி வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறையினர், அந்தப் பெண்ணை மீட்டு புதிய உடைகளை வாங்கி அணிவித்தனர். பிறகு சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் பனையூரில் உள்ள காப்பகத்தில் அந்த பெண்ணை காவலர்கள் ஒப்படைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் வெல்லா என்பது தெரியவந்தது. இவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமலும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், வெல்லா போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இதற்கிடையே மென்பொருள் நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்தார்.

வெல்லாவை காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு விமல் சென்றுவிட்டார்

இந்நிலையில் போதையில் வெல்லா அரை நிர்வாணத்துடன் சுற்றித்திரிந்திருக்கிறார். அவரைக் கண்ட பொதுமக்களில் சிலர், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தற்போது வெல்லா பனையூர் பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் தகவலின் பேரில் வேளச்சேரி சென்று காவல்துறையினர் விசாரித்ததில் விமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி செய்து தலைமறைவாகிட்டது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Sharing is caring!