அரை நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் காலி செய்யப்பட்டது.

தென்கொரியாவில் அரை நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் காலி செய்யப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின்போது, தென்கொரியாவின் சியோல் நகரில் அமெரிக்க ராணுவ முகாம் அமைக்கப்பட்டது. கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட இந்த முகாம் 70 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா, தென் கொரியா இடையே நட்பு மலர்ந்துள்ள நிலையில் தற்போது மூடப்படுவதாக அமெரிக்கா அறிவித்து உள்ளதுவடகொரியாவின் அணுஆயுத மிரட்டல் காரணமாக தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ஐ.நா. சபையும் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 12ந்தேதி (ஜூன் 2018) அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு காரணமாக இருநாடுகளுக்கு இடையே தற்போது மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தென்அமெரிக்காவின் சியோலில் இருந்த ராணுவ முகாமை அமெரிக்கா காலி செய்துள்ளது. இருப்பினும், சியோல் நகரின் தெற்கு பகுதியில் உள்ள பியாங்டெக் என்ற பகுதிய புதிய ராணுவ முகாம் ஒன்றையும் நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!