அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைதானார்

சென்னை:
கைது செய்யப்பட்டார்… அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது செய்யப்பட்டார்.

சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னை வனநாதர் சன்னதியில், பழமையான மயில் சிலை இருந்தது. இது மாற்றப்பட்டு, புதிய சிலை வைக்கப்பட்டுள்ள தாக, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து திருமகள் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து, மயில் சிலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட, திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள, அவரது வீட்டிற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது.

அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டிற்கு அழைத்து சென்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!