அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு மக்கள் அவதி… ஸ்டாலின் கண்டனம்
சென்னை:
அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று
திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அரசு கைவிட வேண்டும். மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் நடந்த ஊழலால், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். மின்பகிர்மான கழகத்தில்,அரசு ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியை நீக்கி, அதில் கவனம் செலுத்தி மின்பற்றாக்குறையைபோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் கடுமையான மின்வெட்டை சந்திக்கும் நிலைமைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S