அறிவிப்பு… எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சென்னை:
அறிவிப்பு… அறிவிப்பு… எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உட்பட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!