அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ஜாக் மா விலகுகிறார்.
பிரபல சீன வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ஜாக் மா விலகுகிறார்.
பிரபல வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் சீனாவில் முதலில் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பிறகு சீனாவின் தலை சிறந்த நிறுவனமாக விளங்கிய அலிபாபா மெல்ல மெல்ல சர்வதேச வர்த்தக நிலைக்கு உயர்ந்து அதிலும் புகழ் பெற்றது. இதன் தலைவரான ஜாக் மா சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.முன்னாள் ஆசிரியரான ஜாக் மா இந்த அலிபாபா நிறுவன தலைமைப் பதவியில் இருந்து விலகப் போவதாக வெகுநாட்களாக தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் அலிபாபா நிறுவனம் பலமுறை இந்த தகவலை மறுத்தது. இந்நிலையில் ஜாக் மா இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பின்படி தற்போது 54 வயதாகும் ஜாக் மா வரும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ஓய்வு பெற உள்ளார். இனி அவர் மீண்டும்தனது ஆசிரியர் பணியில் தம்மை ஈடுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் இயக்குனராக தொடர உள்ளதாகவும் தலைமை பணியை டேனியல் ஷாங்க் ஏற்றுக் கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.