அல்கைதாவின் உயர்மட்ட அதிகாரி ஆப்கானில் கொலை

அமெரிக்க – ஆபிரிக்க இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த கூட்டு இராணுவ நடவடிக்கையில் அல்கைதா இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிய உளவுத்துறை அறிவித்துள்ளது.

இந்திய துணைக்கண்டத்துக்குப் பொறுப்பான அல்கைதா தலைவர் அஸிம் உமர் (Asim Umar) கடந்த 23ஆம் திகதி ஹெல்மண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பில் மேலும் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் அல்கைதா அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.

Sharing is caring!