அல்ஜீரியா செய்த பெரும் கொடுமை… 13 ஆயிரம் அகதிகளை சகாரா பாலைவனத்தில் தள்ளி விட்ட கொடுமை

அல்ஜீயர்ஸ்:
கொடுமை… கொடுமை என்று அகதிகள் விஷயத்தில் அல்ஜீரியா கொடுமை செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்த 13,000 அகதிகளை சகாரா பாலைவனத்தில் கொண்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக அகதிகள் வெளியேறி வருகின்றனர். சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட பலர் அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்தனர்.

ஆனால் அவர்களை அந்த நாடு ஆதரிக்கவில்லை. மாறாக அவர்களை வெளியேற்றுவதற்கு முழு பலத்தையும் பயன்படுத்தியது. கர்ப்பிணிகள், முதியோர் உட்பட 13 ஆயிரம் பேரை சகாரா பாலைவன பகுதியில் அல்ஜீரிய ராணுவம் தள்ளிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த அதிர்ச்சி தகவல் உலக நாடுகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவர்களுக்கு உணவு, தண்ணீர் கூட கிடைக்கவில்லை. பலர் பாலைவனத்திலேயே சமாதியாகி விட்டதாகவும், சிலர் மட்டும் தப்பி அருகாமை கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி தப்பியவர்கள் வாயிலாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு உடன் அந்த பகுதிக்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து அகதிகளை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் நிதி உதவியை அல்ஜீரியா பெற்றுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!