அவசரமாக தரையிறக்கப்பட்ட ரையான் ஏர் விமானம்

189 பேருடன் அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து புறப்பட்ட விமானம், குரேஷியா நோக்கி சென்று கொண்டிருந்ததவேளை நடுவானில் காற்றழுத்தம் குறைந்ததால் ரையான் (Ryan air) ஏர் விமானம், ஃப்ராங்ஃபர்ட் நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது.

11 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் பறந்த விமானத்தில் திடீரென காற்றழுத்தம் குறைந்ததால் 7 நிமிடங்களில் 8 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு கீழிறக்கப்பட்டுள்ளது.இதனால் பயணிகள் சிலருக்கு காதில் இருந்து ரத்தம் வழிந்தது. இதை அடுத்து ஜெர்மனியின் ஃப்ராங்ஃபர்ட் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 30 பயணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring!