அவர்தான் பதில் சொல்லணும்… மத்திய அமைச்சர் கருத்து

மும்பை:
அவர்தான் மவுனம் கலைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

அமெரிக்காவை போன்று தற்போது இந்தியாவி்ல #மீ டூ பிரச்சாரம் பரவலாகி வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இது மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பெண் அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், மேனகா, நிர்மலா சித்தாராமன் ஆகியோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியதாவது:

பாலியல் குற்றச்சாட்டு குறித்து அக்பர் தான் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆதலால் நான் இதில் கருத்து கூற இயலாது. ஏனென்றால், சம்பவம் நடந்த போது நான் இல்லை. அதே சமயம் புகார் அளிக்கும் பெண்களையும் எடைபோட்டு விடாதீர்கள். அவர்கள் பல விஷயங்களைக் கடந்து இவ்வாறு பேசுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!