அவர்தான் பொறுப்பு… முழு பொறுப்பு… அமெரிக்க அதிபர் சொல்றார்

வாஷிங்டன்:
முழு பொறுப்பு… முழு பொறுப்பு… உங்களுக்குதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

வளைகுடா நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டதில், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது நம்பிக்கை வைத்தேன். கீழ்நிலை அதிகாரிகள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று கூறினேன்.

ஆனால் இந்தக் கொலையில், பட்டத்து இளவரசருக்கு முழு பொறுப்புள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் துருக்கிக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!