அவுஸ்திரேலியாவுக்கு பாரமாகிய 5 வயது அகதிக் குழந்தை! அப்படி என்ன நடந்தது தெரியுமா ??

சிறு செயல்பாட்டு குறைபாடுடன் உள்ள 5 வயது குழந்தை அவுஸ்திரேலியாவுக்கு பாரமாக இருப்பான் எனக்கருதியுள்ள அவுஸ்திரேலிய அரசு, அக்குடும்பத்தின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

2012ம் ஆண்டு வங்கதேசத்தில் மெஹதி ஹசன் பூஹூயன் என்பவருக்கும் சுலாதானாவுக்கும் திருமணம் நடந்தது.

பின்னர், அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் இருந்த பொழுது அவர்களுக்கு அடியன் பூஹூயன் என்ற குழந்தை பிறந்துள்ளது.

அக்குழந்தை பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது பிறந்து சில மாதங்களில் அறியப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மெஹதி ஹசன் பூஹூயனுக்கு நிரந்தர திறன் வாய்ந்தவர்களுக்கான விசா கிடைத்துள்ளது.

இதன் மூலம் பூஹூயன் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்ட நிலையில்,சிறுவன் அடியனின் உடல்நிலைக் காரணமாக விசா மறுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து நிர்வாக மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது பூஹூயன் குடும்பம்.

சிறுவன் அடியனுக்கு இடதுகையில் மட்டுமே கொஞ்சம் பலவீனம் உள்ளது, தற்போது மழலையர் பள்ளியில் படிக்கும் அடியனுக்கு எந்தவித கற்றல் குறைப்பாடும் இல்லை எனக் கூறியுள்ளார் சிறுவனின் தந்தை பூஹூயன்.

இச்சிறுவனை நாடுகடத்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தலையிடக்கோரி பூஹூயன் குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sharing is caring!