ஆடி மாதம்… அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்தனர்

அரியலூர்:
ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர்.

ஆடி மாதத்தை முன்னிட்டு அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் கோவிலில் இருந்து நேர்த்திக்கடனாக பால்குடத்தை தலையில் சுமந்து மேள, தாள வாத்தியத்துடன் புறப்பட்டனர்.

துறைமங்கலம், கே.கே.நகர் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். இதே போல் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!