ஆடை விஷயத்திலும் சிறிதளவு தளர்வு… இது சவுதியில்!

ரியாத்:
தளர்வு… தளர்வு… ஆடை விஷயத்திலும் சிறிதளவு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆடைகளுக்கான கட்டுப்பாடும் சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது.

பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்துவந்த தடையை சவுதி இளவரசர் சல்மான் அதிகாரப்பூர்வமாக கடந்த 4ம் தேதி நீக்கினார். இதையடுத்து பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளியில் உலா வரும் பெண்களுக்கான உடைகளில் இருந்த கட்டுப்பாட்டையும் சவுதி அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி உடலை முழுவதும் மறைக்கும் வகையில் இருக்கும் நாகரீக உடைகள் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தற்போது சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உடலை முழுவதும் மறைக்கும் வகையிலான நாகரிக ஆடைகளின் விற்பனையும், தயாரிப்புக்களும் அதிகரித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!