ஆட்சியை கலைக்க பாஜ முயற்சி… துணை முதல்வர் குற்றச்சாட்டு
பெங்களூரு:
ஆட்சியை கலைக்க பாஜ முயற்சி செய்கிறது என்று துணை முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் – காங்., கூட்டணி அரசை கவிழ்க்க, பா.ஜ., முயற்சி செய்வதாக அம்மாநில துணை முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, பரமேஸ்வரா குற்றம்சாட்டியுள்ளார்.
காங்., எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, பா.ஜ., தலைவர் அமித் ஷா சந்திக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S