ஆதரவோ ஸ்ட்ராங்… அப்புறம் எதற்கு நம்பிக்கையில்லை தீர்மானம்?
புதுடில்லி:
ஆதரவு ஸ்ட்ராங்காக இருக்கிறது என்று தெரிந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதற்கு என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (20ம் தேதி) லோக்சபாவில் நடக்கிறது. இந்த விவாதத்தில், காங்., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கேள்விகளும், பா.ஜ., அளிக்கும் பதிலும் காரசாரமாக இருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது.
காலை 11 மணிக்கு துவங்கும் விவாதம், இன்றைய நாள் முழுவதும் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு ஓட்டெடுப்பு எடுக்க வாய்ப்புள்ளது. சிவசேனா, அகாலிதளம், அ.தி.மு.க., ஆதரவு மத்திய அரசுக்கு இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்பது நிச்சயமாகி உள்ளது.
இதனால் பிரதமரின் நேரம் வீணடிக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான தோல்வி, எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நன்றி- பத்மா மகன், திருச்சி