ஆந்திரா ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பேற்பு
ஆந்திரா:
ஆந்திரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் பொறுப்பேற்றார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாகிறது. இரு மாநிலங்களுக்கும் தனித் தனியாகி ஐகோர்ட் வேண்டும் என்று இரு மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து ஆந்திர மாநில தனி உயர் நீதிமன்றம் தலைநகர் அமராவதியிலும், தெலுங்கானா மாநில உயர் நீதிமன்றம் ஹைதராபாத்திலும் அமைக்கப்பட்டது. ஆந்திராவுக்கான கோர்ட் கட்டிடம் அமராவதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடியும் வரை உயர் நீதிமன்றம் விஜயவாடாவில் தற்காலிகமாக செயல்படும்.
இந்நிலையில் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் பொறுப்பேற்றார். ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்.வி. ரமணா ஆகியோர் பங்கேற்றனர்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். கொண்டார். அவருடன் 12 நீதிபதிகளும் பதவியேற்றனர்.
இரு மாநில பொதுவான ஐகோர்ட்டில் 3.4 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 70 சதவீத வழக்குகள் ஆந்திர மாநிலம் தொடர்பானவை. 1600 ஊழியர்கள், 58:42 என்ற வீதத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி- பத்மா மகன், திருச்சி