ஆன்லைன் வணிகத்தில் பிளிப்கார்டை பின்னுக்கு தள்ளிய அமேசான்

புதுடில்லி:
ஆன்லைன் வணிகத்தில் பிளிப்கார்டை பின் தள்ளி அமேசான் அபாரமாக முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் முக்கிய பங்குகளை வகித்தது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வந்தது.

நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி அமேசான் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக வணிகத்தில் ஆப்பிள் நிறுவனத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் வால்மார்ட் நிறுவனம் அண்மையில் பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியது. இந்நிலையில்தான் விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை அமேசான் முந்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!